Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“செய்வினை செய்ததால் கொன்றேன்” மூதாட்டிக்கு நடந்த கொடூரம்…. தொழிலாளியின் பரபரப்பு வாக்குமூலம்…..!!!

மூதாட்டியை தொழிலாளி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கே.மேட்டுப்பாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி(88) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சுகுமாரன் என்ற மகனும், ராதா என்ற மகளும் இருக்கின்றனர். சுகுமார் அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். மகளும், மகனும் வெளியூரில் இருப்பதால் கே. மேட்டுப்பாளையத்தில் இருக்கும் வீட்டில் சரஸ்வதி தனியாக வாழ்ந்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல கோலம் போடுவதற்காக மூதாட்டி வெளியே வந்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர் மூதாட்டியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

அவரது அலறல் சுத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு கோபியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மூதாட்டியை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் சரஸ்வதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் பக்கத்து வீட்டில் வசிக்கும் தொழிலாளியான பாலுசாமி என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது பாலுசாமி கூறியதாவது, எனது வீட்டிற்கு அருகே சரஸ்வதியின் தோட்டம் அமைந்துள்ளது.

அங்கிருக்கும் ஒரு கோவிலில் சரஸ்வதி இரவு நேரத்தில் பூஜை செய்து பஜனை பாடல்களை பாடுவது எனக்கு தொந்தரவாக இருந்தது. இந்நிலையில் நான் வேலைக்கு செல்லாமல் இருப்பதற்கும், எனக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கும் சரஸ்வதி எனக்கு செய்வினை செய்ததால் நான் நிம்மதியை இழந்தேன். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் கோபத்தில் வாசல் தெளித்துக் போட வந்த சரஸ்வதியை வெட்டிக்கொலை செய்தேன் என பாலுசாமி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |