செரிமானத்தை சீராக்கும் மிளகு தூள் பயன்கள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
வயிறு நிறைய உணவு உண்ட பிறகு செரிமானம் ஆக கொஞ்சம் சிக்கல் ஏற்படும். அந்த வேளையில் மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்து வந்தால் செரிமானத்தை சீராக்கும்.
மழைக் காலத்தில் தும்மல், சளி பிரச்சனை அதிகரிக்கும் போது கொஞ்சம் மஞ்சள்தூளுடன் மிளகுத்தூளை சேர்த்து பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரண்டே நாளில் தும்மல், சளி பிரச்சனை சரியாகும்.
மிளகை பொடி செய்து நீரில் இட்டு காய்ச்சி வடிக்கடி, அந்த நீரைக் குடித்து வந்தால் கபம் சரி ஆகும்.
நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.
ரத்தத்தை சுத்திகரிப்பு செய்கிறது.
பல்வலி, பல் கூச்சம், வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
பசியின்மையை போக்குகிறது.
உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது.
ஞாபக மறதி, உடல் சோர்வு, சளி தொந்தரவுகளை நீக்குகிறது.