நாம் உண்ணும் உணவே சில சமயங்களில் நமக்கு செரிமானம் ஆகாமல் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது நமக்கு சில பிரச்சினைகள் ஏற்படும். அவற்றை எப்படி சரி செய்வது என்பதை பற்றி நாம் இதில் தெரிந்து கொள்வோம்.
சாப்பிட்ட சாப்பாடு சரியாக செரிமானம் ஆகாமல் இருந்தால் அதை சரிசெய்ய ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு ஓமத்தைப் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.
சோம்புவில் ரசாயனங்கள் உள்ளன அதனால் வெறும் சோம்பை வாயில் போட்டு மென்று உமிழ்நீரை விழுங்கி சிறிதளவு தண்ணீர் குடித்தால் வயிறு பிரச்சனைகள் சரியாகிவிடும்.