சசிகலாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதற்காக ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா அதிரடியாக கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என தேனி மாவட்ட நிர்வாகிகள் கூறியபோது இதனை கோரிக்கையாக பதிவு செய்து கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கிறேன் என கூறிய ஓ. பன்னீர்செல்வம் திடீரென ஓ.ராஜா சசிகலாவை சந்தித்த ஈபிஎஸ் உடன் சேர்ந்து அவரை கட்சியிலிருந்து அதிரடி நீக்கம் செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து ஓ. ராஜா பெரியகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது கட்சி இரட்டை தலைமையில் இயங்குவது தான் கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம்.
சசிகலாவால் மட்டுமே இந்த கட்சியை தூக்கி நிறுத்த முடியும்..!என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அவ்வாறு இருக்கையில் கட்சித் தலைமை இவ்வாறு நடந்து கொள்வது கட்சியை மேலும் கீழ் நோக்கி தான் எடுத்துச் செல்லும். இதுகுறித்து திருச்செந்தூரில் வைத்து சசிகலாவை சந்தித்து நான் பேசினேன் அப்போது அவர் ஓபிஎஸ் இபிஎஸ் கட்சியில் இருக்கும் பட்சத்தில் தான் நான் அதனை தலைமையேற்று வழி நடத்துவேன் என அவர் கூறினார். அதுமட்டுமல்லாமல் சசிகலாதான் கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளர் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை இவ்வாறு அவர் கூறினார்.