பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் சீசன் 6-ல் நுழைந்த ஜிபி முத்துவுக்கு முதல் நாளில் இருந்தே ரசிகர்களின் பெரும் ஆதரவு இருந்து வந்தது. ஜி பி முத்து வழக்கம் போல தன்னுடைய காமெடி மூலம் கலக்கி வருகிறார். டிக் டாக் செயலியில் தனது பயணத்தைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்டவர்தான் ஜி.பி.முத்து. துவக்கத்தில் வெறுத்தவர்கள் அனைவரையும் தனது ரசிகர்களாக்கி கோலோச்சி வருகிறார் இவர். டிக் டாக் முடக்கப்பட்டதை தொடர்ந்து யூடியூபில் கலக்கியவர் தற்போது பிக் பாஸில் நுழைந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று நடந்த ஒரு சண்டையின் போது ‘நான் பெற்ற மகளாக இருந்தால் செருப்பால் அடித்திருப்பேன்’ என்று தனலட்சுமி குறித்து விக்ரமனிடம் ஜிபி முத்து கூறியதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்