Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செருப்பு கடை நடத்தியவர் மருத்துவரா?…. பின்னர் நடந்த விபரீதம்….. பெரும் பரபரப்பு….!!!!

மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில்  மொஹைதீன் (33) என்பவர்  வசித்துவருகிறார். இவர் பி.காம் படித்து விட்டு செருப்புக் கடை நடத்தி வந்தார். இதற்கிடையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் செருப்பு கடை நஷ்டம் ஏற்பட்டதால், கேரளா சென்று வர்ம வைத்தியம் குறித்து ஒரு வருட பயிற்சி பெற்றார். அதன்பிறகு அதே பகுதியில் அம்பா வர்ம வைத்யசாலை என்ற பெயரில் கிளினிக் நடத்தியுள்ளார். இந்த கிளினிக்கில் அப்பகுதி மக்கள் பலரும் சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது பெரும்பாலனோருக்கு தீவிர பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்கு சையத் சுல்தான் ஆட்டுத் தலை, இரும்புத் தூள், கோழி எலும்புகள் போன்றவற்றிலிருந்து மருந்துகளைத் தயாரித்து கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நோயாளிகளை மற்ற மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும், நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரக நோய், மனநோய், தைராய்டு போன்ற நோய்களை அலோபதி மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது என்று கூறி பல ஆண்டுகளாக நோயாளிகள் உட்கொண்டு வந்த மாத்திரைகளை உபயோகிக்க வேண்டாம் என சொன்னதால், பல நோயாளிகள் மருத்துவச் சிக்கலுக்கு ஆளானதும் தெரிய வந்தது. இதனையடுத்து மொஹைதீன் போலி மருத்துவர் என்று கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார்.

 

Categories

Tech |