தனது கார் மீது வீசப்பட்ட செருப்பின் புகைப்படத்தை இணைத்து நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பிட்டர் பதிவு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான சண்டையின்போது உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்தி விட்டு செல்லும் வழியில் நேற்று பழனிவேல் தியாகராஜன் காரை பாஜகவினர் முற்றுகையிட்டனர். அப்போது அவரின் கார் மீது பாஜக மகளிர் நிர்வாகிகள் காலனியை வீசினர் .
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பழனிவேல் தியாகராஜன்,பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் குறித்து நான் பேச விரும்பவில்லை . இது சரியான தருணம் இல்லை என்று கூறிவிட்டு சென்றார் .இந்நிலையில் தனது கார் மீது வீசப்பட்ட செருப்பை இணைத்து பழனிவேல் தியாகராஜன் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், நேற்றைய நிகழ்வுகளைப் பற்றி நான் பின்னர் கூறுவேன். ஆனால் இப்போதைக்கு பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு சில நூறு மீட்டர்களுக்கு தனது கட்சி உறுப்பினர்களுடன் அனுமதிக்கப்பட்ட காணாமல் போன “பழைய விமான நிலையத்தின் சிண்டரெல்லா”தனது செருப்பு மீண்டும் வேண்டுமென நினைத்தால் அவருக்காக எனது உதவியாளர் அதனை பத்திரமாக எடுத்து வைத்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்