Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

செலவுக்கு பணம் கொடுத்த தந்தை…. இளம்பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கணவர் வேலைக்கு செல்லாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்போது கிராமத்தில் கிருபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரன் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கீர்த்தனாவின் தந்தையான பாபு என்பவர் தனது மகள் செலவிற்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

இன்னிலையில் கணவர் வேலைக்கு செல்லாமல் இருப்பதை நினைத்து மன உளைச்சலில் இருந்து கீர்த்தனா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கீர்த்தனாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |