Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

செலவுக்கு பணம் தராமல் இருந்த நபர்…. பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேவூர் ஈ.பி நகர் விவேகானந்தர் தெருவில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி(37) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு அபிநயா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பட்டு சேலை தயாரிப்பாளரான கோதண்டராமனிடம் சிவகுமார் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தேவிக்கும், கோதண்டராமனுக்கும் இடை பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த சிவக்குமார் தனது மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

பின்னர் கோதண்டராமன் தேவியுடன் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டிற்கு செல்லாமலும், செலவுக்கு பணம் தராமலும் கோதண்டராமன் இருந்ததால் தேவி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மன உளைச்சலில் தனது வீட்டில் தேவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று தேவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |