தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக மின்சார கட்டணத்தை உயர்த்தவில்லை. மின்சாதன பொருட்களின் விலையேற்றம், ஊழியர்களின் வருமானம் அதிகரிப்பால் செலவு அதிகரித்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதே எங்கள் ஆட்சியில் நோக்கமாக இருந்தது. மின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் பெரும்பாலும் திமுக ஆட்சியில்தான் போடப்பட்டது என்று தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறையில் ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் கூறியுள்ளது.
ஆனால் அந்த அறிக்கையில், மின்துறையில் ஊழல் ஏற்படவில்லை எனவும், இழப்புதான் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். மேலும் மின்சாரத் துறையில் பெரிய ஊழல் ஏற்பட்டது போல திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இது முழுக்க முழுக்க பொய் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி எதுவும் எங்கள் ஆட்சியில் நடை பெறவில்லை எனவும், எங்கள் ஆட்சியின் போது தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது எனவும் கூறியுள்ளார். ஆனால் தற்போது தொடர்ந்து தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்துக்கொண்டு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.