தீராத தலைவலிக்கு நாட்டு மருத்துவம் கூறும் வைத்தியத்தை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம்.
தற்போது உள்ள காலகட்டத்தில் சின்ன தலைவலி என்றால் கூட நாம் அனைவரும் மருத்துவரையே பார்க்கிறோம். அதுவும் மாத்திரையை அதிகளவில் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இயற்கை முறையில் நாம் தலைவலிக்கு தீர்வு காணமுடியும். உடலிலுள்ள பல பிரச்சினைகளுக்கு இயற்கை மருத்துவமே மிகச் சிறந்தது. அதிலும் குறிப்பாக பாட்டி வைத்தியம் அனைத்து நோய்களுக்கும் மிக சிறந்த நிவாரணம்.
தீராத தலைவலிக்கு பாட்டி கூறும் வைத்தியத்தை பற்றி பார்ப்போம். வெற்றிலை சாறு எடுத்து அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசினால் தலைவலி பத்து நிமிடத்தில் தீர்ந்துவிடும். கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது சிறிது நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும். இதேபோல புதினா இலைகளை இடித்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குணமாகும்.