Categories
தேசிய செய்திகள்

செல்பி எடுக்கும் போது… மலை அருவியில் இருந்து தவறி விழுந்து இன்ஸ்டாகிராம் பிரபலம் மரணம்… சோக சம்பவம்…!!!

ஹாங்காங்கை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சோபியா சியுங் செல்பி எடுக்கும் பொழுது மலை அருவியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங்கை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சோபியா சியுங். இவர் தனது நண்பர்களுடன் கடந்த சனிக்கிழமை, மலையேறுபவர்கள் இடையே பிரபலமான ஹா பாக் லாய் என்ற பூங்காவிற்கு மலை பயணம் சென்றுள்ளார். அங்கு பூங்காவின் அன்னாசி மலை தளத்தில் உள்ள ஒரு அருவியின் விளிம்பில் நின்று சோபியா சியுங் செல்பி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கும் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது பயணங்கள் மற்றும் புகைப்படங்கள் நிறைந்துள்ளது. அவரது கடைசி படம் ஜூன் 9 அன்று வெளியிடப்பட்டது. அதில் கடற்கரையில் போஸ் கொடுத்திருப்பார்.

Categories

Tech |