Categories
மாநில செய்திகள்

செல்பி எடுக்க ஒரு அளவே இல்லையா?…. செம்பரம்பாக்கம் ஏரியல் தவறி விழுந்து 2 பேர் பலி…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!!!

ஏரிகள் தவறி விழுந்து 2  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள தரப்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார் மெக்கானிக்காக வேலை பார்க்கும் விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் அதே பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன்  ரிச்சர்ட்ஸ் என்பவருடன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் ஏரியை சுற்றி பார்த்துவிட்டு ஏரிக்குள் இறங்கி அங்கிருந்து சிறிய மதகில்  ஏறி நின்றபடி தங்களது செல்போனில் செல்பி எடுத்துள்ளனர். அப்போது திடீரென இருவரும் தவறி தண்ணீரில்  விழுந்து விட்டனர். இருவரும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில்  மூழ்கினர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் காப்பாற்ற முடியவில்லை.அதனால்  உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி 2 பேரின் சடலத்தையும்   கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர் கதறி துடிக்கும் காட்சி பார்ப்போரின் மனதை கலங்க வைத்துள்ளது.

Categories

Tech |