Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“செல்பி” எடுக்க போஸ் கொடுக்கும் கருங்குரங்கு…. ஆச்சரியத்தில் பொதுமக்கள்…!!

வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த கருங்குரங்கு ஒன்று பொதுமக்களுடன் அன்பாக பழகுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆலம்பாறை பகுதியில் கடந்த சில வாரங்களாக கருங்குரங்கு ஒன்று சுற்றி திரிகிறது. இந்த கருங்குரங்கு மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்துள்ளது. இந்நிலையில் இடையூறு அளிக்காமல் இந்த கருங்குரங்கு பொதுமக்களுடன் அன்பாக பழகி வருகிறது. மேலும் யாராவது செல்பி எடுக்க சென்றால் அந்த கருங்குரங்கு அழகாக போஸ் கொடுக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சிறுவர்களும், சிறுமிகளும் கருங்குரங்கிடம் அன்பாக பழகுகின்றனர்.

Categories

Tech |