மெக்சிகோ நாட்டிலுள்ள உயிரியல் பூங்காவிற்கு கடந்த சனிக்கிழமை அன்று தனது நண்பர்களுடன் இணைந்து இளம்பெண் சுற்றி பார்க்க சென்றுள்ளார். அங்குள்ள ஒரு கூண்டுக்குள் குரங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த அந்த இளம் பெண் அந்த குண்டு அருகே சென்று செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். செல்ஃபி புகைப்படம் எடுக்க வசதியாக கூண்டின் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த குரங்கு ஒன்றை விரட்டுவதற்காக தனது கையை வீசி செய்கை செய்துள்ளார். அப்போது அந்த குரங்கு கூண்டில் கம்பிய இடைவெளி வழியாக அந்த இளம் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் குரங்கிடம் இருந்து விடுபட முயற்சித்துள்ளார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் குரங்கின் பிடியில் இருந்து பெண்ணை விடுவிக்க கூச்சலிட்டினர். சில வினாடிகளில் அந்த குரங்கு பெண்ணின் தலை முடியை விட்டுள்ளது. இதனையடுத்து அந்த இளம் பெண் அந்த கூண்டு அமைந்துள்ள பகுதியில் இருந்து வெளியே செல்ல முயற்சித்துள்ளார். அப்போது வெளியே செல்லும் பாதைக்கு கூண்டு அருகே அமைந்திருந்த நிலையில் அவ்வழியாக அப்பெண் சென்றபோது மீண்டும் அந்த குரங்கு பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்தது. அந்த குரங்குடன் இணைந்த மற்றொரு குரங்கும் அப்பெண்ணின் தலைமுடியை இழுத்தது. அதன் பிறகு சில வினாடிகள் கழித்து இரு குரங்குகளுக்கும் அந்தப் பெண்ணின் தலைமுடியை விட்டு விட்டு சென்றது. மேலும் இந்த சம்பவத்தை அப்பெண்ணுடன் வந்து நண்பர் ஒருவர் வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
In a #viralvideo on #socialmedia, we can see #spidermonkeys catch hold of a girl by her hair & pull her aggressively in a #zoo in #Mexico. She was seen teasing the #monkeys & hitting their cage to record a video. Watch the video to see how the monkeys #attacked the girl pic.twitter.com/249G6AEbpX
— Mirror Now (@MirrorNow) July 26, 2022