Categories
சினிமா தமிழ் சினிமா

செல்பி எடுத்த ரசிகர்….. போனை பிடுங்கிய பிரபல நடிகர்….. வைரல் VIDEO….!!!!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா ரகுபதி. இவர் பாகுபலி திரைப்படத்தில் வில்லனாக நடித்த அசத்தியிருந்தார். அதன் பிறகு தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்தார். இவர் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது குடும்பத்துடன் திருப்பதி சென்ற ராணா அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் புறப்பட்டார்.

சாமி தரிசனம் செய்துவிட்டு கோயிலை விட்டு வெளியில் வந்த ராணாவிடம் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றார். நடந்து சென்று கொண்டிருந்த ராணாவுக்கு முன்பு வந்து செல்பி எடுக்க போனை நீட்டி அந்த நபரிடம் இருந்து ராணா செல்போனை பிடுங்கிவிட்டார். சிறிது நேரம் அந்த ரசிகரை அலையவிட்டார். பின்னர் சிரித்துக்கொண்டே செல்போனை ரசிகர் இடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |