Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“செல்பி” புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்….. கர்ப்பிணி பெண் தற்கொலை முயற்சி…. போலீஸ் வலைவீச்சு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி கிழங்குவிளை பகுதியில் பிஜூ (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் பேன்சி கடை நடத்தி வருகிறார் இந்த கடையில் 20 வயதுடைய இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெண்ணை மிரட்டி அருகில் நிற்க வைத்து பிஜூ செல்போனில் செல்பி எடுத்து வைத்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது. தற்போது இளம்பெண் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாலும், பிஜூவின் நடவடிக்கை சரியில்லாததாலும் இனி வேலைக்கு வரமாட்டேன் என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த பிஜூ வேலைக்கு வரவில்லை என்றால் என்னிடம் இருக்கும் புகைப்படங்களை உனது கணவருக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

மேலும் இளம்பெண்ணின் கணவருக்கு வேறு ஒரு செல்போனில் இருந்து புகைப்படங்களை அனுப்பியதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த பெண் நேற்று முன்தினம் தனது தாய் வீட்டிற்கு சென்று எறும்பு பொடியை தண்ணீரில் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமுறைவான பிஜூவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |