செல்போன் பேசியபடியே நடந்து சென்ற பெண்மணி கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி குட்டக் கிந்தூர் கிராமத்தில் வசிப்பவர் திருமூர்த்தி. இவர் மனைவி லக்சனா. இவர் வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் செல்போனில் பேசியபடியே சென்றார். அப்போது அங்கிருந்த கிணற்றில் கால் தவறி விழுந்தார். அதைக்கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் காப்பாற்ற முயற்சி செய்தனர்.
அதற்குள் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த உமராபாத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததோடு. வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லக்சனாவிற்கு திருமணம் முடித்து 3 1/2 வருடங்கள் ஆனதால் அவரது மரணத்தில் சந்தேகம் கொண்டு வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணியம் தலைமையில் விசாரணைமேற்கொள்ளப்பட்டு வருகிறது.