செல்போன் பார்ப்பதை தந்தை கண்டித்ததால் மாணவன் விஷம் குறித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள டி.வாடிப்பட்டி கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அரவிந்த் அப்பகுதியில் உள்ள மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அரவிந்த் படிக்காமல் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். எனவே கண்ணன் அரவிந்தை சொல்போன் பார்க்ககூடாது என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அரவிந்த் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து மகன் மயங்கி கிடப்பதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அரவிந்த் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி அரவிந்த் உயிரிழந்துள்ளார். இதனையறிந்த ஆண்டிபட்டி காவல்துறையினர் அரவிந்த் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.