நன்றாக படிக்கும் படி பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் மேற்கு கொடிகம்பம் பகுதியில் செந்திளுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நந்தினி 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி சரியாக படிக்காமல் செல்போன் பார்த்து கொண்டிருந்ததால் பெற்றோர் நந்தினியை கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மகளை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் நந்தினி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.