விவசாயிடம் பணமோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள நரசோதிபட்டி கிராமத்தில் விவசாயியான பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனிற்கு கிெரடிட் கார்டின் உச்சவரம்பு தொகையை உயர்த்தித் தர இருப்பதாகவும், அதற்காக வங்கி சேமிப்பு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பதிவு செய்யுமாறு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதனை நம்பிய பிரபாகரன் அந்த லிங்கில் தனது வங்கி விவரங்களை பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து சிறிது நேரத்தில் தனது வங்கி கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் பணம் எடுத்ததாக பிரபாகரன் செல்போனிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.