மோட்டார் சைக்கிள் மோதி ரோட்டில் நின்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கிராமத்தில் அப்துல்லா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரையூர் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் நின்று செல்போனில் பேசியுள்ளார். அப்போது அவ்வழியாக ராஜா என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அப்துல்லாவின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அப்துல்லா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
மேலும் படுகாயமடைந்த ராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்துல்லாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.