செல்போனில் யாரிடமோ பேசியதால் தலையில் கல்லைப்போட்டு மனைவியை கொன்றதாக கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்திலுள்ள அத்திப்பட்டி கே.கே நகரில் ஹோட்டல் தொழிலாளியான முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முனியசாமி கவிதாவின் தலையில் கல்லை போட்டு அவரை கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முனியசாமியை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் முனியசாமி கூறியிருப்பதாவது, நான் எனது உறவினரின் மகளான கவிதாவை திருமணம் செய்தேன். வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே நான் வீட்டிற்கு வருவேன். அப்போது கவிதா அடிக்கடி செல்போனில் பேசி கொண்டிருப்பார். இதனை கண்டித்ததால் கவிதா குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கோபத்தில் எனது மனைவியின் தலையில் கல்லை போட்டு அவரை கொலை செய்தேன் என முனியசாமி வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்பின் காவல்துறையினர் முனியசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.