நிலைதடுமாறி பாலத்தில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன் பாளையம் அருகில் இருக்கும் அக்ரகாரம் பிள்ளையார் கோவில் வீதியில் அய்யாசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளமடையில் உள்ள தனியார் மாட்டுத்தீவன கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முதியவர் மாட்டுத்தீவன கடையின் பின்புறம் உள்ள ஒரு சிறிய பாலத்தின் மீது உட்கார்ந்து கொண்டு கைபேசியில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென கால் தவறி அய்யாசாமி பாலத்தில் விழுந்து விட்டார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து முதியவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.