Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிய வாலிபர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் பீகார் மாநிலத்தை சேர்ந்த அபினேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் பொக்லைன் இயந்திர ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அபினேஷ் பாட்னாவில் இருக்கும் தனது மனைவியுடன் அடிக்கடி செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த அபினேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அபினேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |