மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள சிந்தாமணி ரோட்டில் இருக்கும் அரிசி ஆலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அகிலேஷ் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆலையில் இருக்கும் மாடியில் நின்று அகிலேஷ் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூரை மீது அகிலேஷ் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அகிலேஷ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.