பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
புதுச்சேரியில் உள்ள கலிதீர்த்தால்குப்பம் கிராமத்தில் ராஜலட்சுமி(23) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஓராண்டாக ராஜலட்சுமியும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநரான அஷ்ரப் அலி(23) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ராஜலட்சுமியின் பெற்றோர் தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.
இதனால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வில்லியனூர் விநாயகர் கோவிலில் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து காதலர்கள் விழுப்புரத்தில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர். இதனை அறிந்த ராஜலட்சுமியின் உறவினர்கள் அஷ்ரப் அலியை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர். இதனால் காதலர்கள் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். மேலும் அவர்கள் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளனர்.