கடலூரில் செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் புருஷோத்தமன் நகரை சேர்ந்தவர் நாகராஜ் இவருக்கு செந்தமிழ் என்கிற மகள் இருக்கிறாள். கடலூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் வீட்டு வேலை எதுவும் செய்யாமல் செல்போனையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
இதை பார்த்த அவரது தாய் லட்சுமி கண்டித்துள்ளார். பின்பு லட்சுமி ஆடு மேய்க்க சென்று விட்டு மாலையில் வீடு வந்து சேரும்போது, செந்தமிழ் வாந்தி, மயக்கத்துடன் இருந்தாள். இதை தாய் லட்சுமி விசாரித்தபோது, தான் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
பின்பு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி செந்தமிழ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி போலீசில் லட்சுமி அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.