மாணவியின் செல்போன் எண்ணிற்கு ஆபாச படம் அனுப்பிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள படூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் இருக்கும் விடுதியில் ஏராளமான மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு பாலசுப்பிரமணி(42) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணி விடுதியின் வருகை பதிவேட்டில் இருந்து ஒரு மாணவியின் செல்போன் என்னை எடுத்துள்ளார்.
இதனை அடுத்து பாலசுப்பிரமணி அந்த மாணவியின் செல்போன் எண்ணிற்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் கல்லூரியின் முதல்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாலசுப்ரமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.