கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜீவா மோகன் என்ற மாணவி 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி எழுதி இருந்த மூன்று பக்க கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில், நான் செல்போனுக்கு அடிமையாகிவிட்டேன் என்னால் அதிலிருந்து மீள முடியவில்லை.
அதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் அந்த மாணவியின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பெற்றோர்கள், எனது மகள் நன்றாக படிக்க கூடியவள். அவள் தினமும் அறையை சாத்திக் கொண்டு தான் படிப்பாள். கடந்த சனிக்கிழமை அப்படி தான் படித்துக் கொண்டிருந்தாள். சாப்பிட வருமாறு கதவை தட்டிய போதுதான் அவள் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம் என்று கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில்,மாணவி செல்போனுக்கு அடிமையானதற்கான பெரிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. அடிக்கடி யூடியூபில் கொரியன் படங்களில் நிகழ்ச்சியை பார்த்ததாக தெரிகிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இல்லை. இருந்தாலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றோம் என்று கூறியுள்ளனர்.