Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த அழைப்பு…. வாலிபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

பணமோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மங்கலத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் விமான நிலையத்தில் வேலை இருப்பதாகவும், அதற்காக பணம் செலுத்துமாறும்    கூறியுள்ளார். இதனை நம்பிய  ராஜா  அந்த மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு 80 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து  ராஜன் அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். அனால் தொடர்பு கொள்ள முடியாததால் அதிர்ச்சி அடைந்த ராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பண  மோசடி செய்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |