Categories
சேலம் மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி…. முதியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

முதியவர்களிடம் இருந்து  ரூ.3½ லட்சம்  பண மோசடி மோசடி செய்த நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.  

சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் பகுதியில் குருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி  வந்துள்ளது அந்த குறுஞ்செய்தியில் உங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள லிங்கை பதிவிறக்கம் செய்து புதுப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பிடபட்டிருந்தது. இதனை உண்மை என்று நம்பிய குருமூர்த்தி லிங்கை பதிவிறக்கம் செய்து வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை அதில் குறிப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் குருமூர்த்தியின் வங்கி கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்து 991 எடுக்கப்பட்டதாக அவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனை  பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த குருமூர்த்தி சேலம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம்  எஸ்.எஸ்.நகரில் வசித்து வரும்  சாகுல் ஹமீது என்பவரின் செல்போன் எண்ணிற்கு வங்கி விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று  குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனை நம்பிய சாகுல் ஹமீது  குறுஞ்செய்தியில் வந்த இங்கே பதிவிறக்கம் செய்து வங்கி கணக்கு எண்,பான் கார்டு விவரம், ஓ.டி.பி. எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டுள்ளார். சிறிதுநேரத்தில் சாகுல் ஹமீது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 128 எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது .இதுகுறித்து  சாகுல் ஹமீது காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளார். அந்த  புகாரின்  பேரில்  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Categories

Tech |