விஞ்ஞானியிடம் இருந்து பணத்தை மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் மெய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் விஞ்ஞானியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் மெய்யப்பனின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் இருந்த லிங்கை திறந்து மெய்யப்பன் வங்கி கணக்கு விவரங்களை குறிப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மெய்யப்பன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து பண மோசடியில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.