வாலிபரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேலாண்டிபாளையம் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜ்குமார் தனது நண்பரான சரவணகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரம் அமர்ந்து பேசி விட்டு ராஜ்குமார் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். ஆனால் அவரது செல்போனை மறந்து அங்கேயே வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் திரும்பி வந்த ராஜ்குமார் எனது செல்போனை மறந்து இங்கே வைத்துவிட்டு சென்று விட்டேன். எனவே செல்போனை தரும்படி கேட்டுள்ளார்.
ஆனால் இங்கே எந்த செல்போனும் இல்லை என சரவணகுமார் தெரிவித்துள்ளார். இதனால் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சரவணகுமார் வீட்டில் இருந்த கத்தியால் ராஜ் குமாரை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ராஜ்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.