செல்போனை தர மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அசோக் ஷைனி-சுதீஷ் ஷைனி தம்பதியினர். கடந்த 14ம் தேதி அசோக் தனது மனைவி சுதீஷின் செல்போனை பார்ப்பதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் சுதீஷ் தனது செல்போனை கணவரிடம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபம் கொண்ட அசோக் இரவு 1:30 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்துவிட்டு சடலத்தை குளியலறையில் போட்டுவிட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டது சுதீஷின் கணவர் தான் கொலை செய்தார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த அசோக்கை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். அப்போது சமூக வலைதளத்தில் எனது மனைவி வீடியோ பதிவிடுவது எனக்கு பிடிக்கவில்லை அவரது நடத்தையில் எனக்கு சந்தேகம் இருந்தது. இதனால் தான் கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார்.