வேடசந்தூர் அருகே செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர்கள் கண்டித்ததால் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள காசி பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி முருகேஸ்வரி என்ற தம்பதியின் மகள் சுதா. இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். சுதா அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதால் பெற்றோர்கள் அவரை கண்டித்துள்ளனர். நேற்று முன்தினம் காலை பெற்றோர்கள் சுதாவை கண்டித்துவிட்டு சுப்பிரமணி கட்டிட வேலைக்கும், மனைவி முருகேஸ்வரி கூலி வேலைக்கும் சென்று விட்டார்.
மாலை வீடு திரும்பிய போது, சுதா வீட்டின் மின்விசிறி மட்டும் கொக்கியில் சேலையால் தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல் துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.