Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனை பறித்த ஓட்டுநர்…. பின்தொடர்ந்து வந்த மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை பகுதியில் 15 வயதுடைய சிறுமி 10- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கும், அதே பகுதியில் வசிக்கும் வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஓட்டுனரான குணசேகரன் என்பவர் மாணவியை ஒருதலையாக காதலித்து அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது மாணவி வேறு ஒரு நபரை காதலிப்பது குணசேகரனுக்கு தெரியவந்தது.

இதனால் வீட்டிற்கு அருகில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த மாணவியிடமிருந்து குணசேகரன் செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார். அவரை பின்தொடர்ந்து மாணவியும் ஓடியுள்ளார். அப்போது தான் காட்டுப்பகுதிக்கு வந்ததை அறிந்த மாணவி அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் குணசேகரன் மாணவியை மடக்கி பிடித்து செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க நான் கூறும்படி கேட்க வேண்டும் என மிரட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து குணசேகரன் தனது நண்பர்களான விஜய் உள்பட இரண்டு பேருக்கும் மாணவியின் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். அவர்களும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் குணசேகரனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் விஜய் உள்பட இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |