Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனை வாங்கி வைத்த பெற்றோர்…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பி.என்.புதூர் நேதாஜி வீதியில் செல்வகுமார்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தாரணி(14) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போன் உபயோகித்து கொண்டிருந்த தாரணியை அவரது பெற்றோர் கண்டித்தனர். நேற்று முன்தினம் தம்பதியினர் வேலைக்கு செல்லும்போது தாரணியிடமிருந்து செல்போனை வாங்கி வைத்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர் கதவை தட்டினர். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தங்களது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |