மனிதனின் வாழ்வில் மின்சாரம் மற்றும் இன்டர்நெட் அலர்ஜியை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் மனிதனின் வாழ்க்கை நவீன தொழில்நுட்பங்களால் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவை நமது வாழ்வை மிக எளிமையாக்குகின்றன. செல்போன் மற்றும் இணையத்தளம் வாழ்வில் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்தநிலையில் 48 வயதான Bruno Barrick கடந்த நான்கு ஆண்டுகளாக மின்சாரம் மற்றும் மொபைல், அலர்ஜியை ஏற்படுத்துவதால் அவை இல்லாமல் தனியே வாழ்ந்து வருகிறார்.
இதற்கு எலக்ட்ரோ சென்சிடிவிட்டி என்று பெயர். இது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் செல்போன்கள் அதிகம் உபயோகிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும். இந்த எலக்ட்ரோ சென்சிடிவிட்டி வந்தால் மனிதனின் உடலில் பெரும் பாதிப்பு ஏற்படும்.