Categories
தேனி மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரம் அமைக்கும் பணி… பொதுமக்கள் எதிர்ப்பு… போலீசார் பேச்சுவார்த்தை…

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றுள்ளது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அந்த இடத்தில் திரண்டு செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த கம்பம் வடக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் காவல்துறையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க நீதிமன்றத்தின் உத்தரவு கொண்டு வருமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு பின்னரே ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |