Categories
இராணுவம் உலக செய்திகள்

செல்போன் செயலி வேண்டுமா ? இராணுவம் வேண்டுமா ? முடிவு உங்கள் கையில்… நீதி மன்றம் அறிவிப்பு ..!!

நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தாக இருக்கும் செயலிகள் வேண்டுமென்றால் ராணுவத்தை விட்டு விலகி விடலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மொபைல் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, ராணுவ அதிகாரி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “பேஸ்புக் செயலியை நீக்குங்கள், இல்லையென்றால் ராணுவத்தை விட்டு விலகிச்செல்லுங்கள்” என காட்டமாக கூறியது. சமீபத்தில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற 89 மொபைல் செயலிகளை பயன்படுத்த, ராணுவ வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, லெப்டினன்ட் கர்னல் பி.கே.சவுத்ரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘என்னைப் போன்ற ராணுவ வீரர்களுக்கு, தங்கள் குடும்பத்தினருடன் பேசவும் தகவல்களை பரிமாறவும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் உதவியாக இருந்து வருகின்றன. எனவே, அதற்கு தடை விதிப்பது, வீரர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாக உள்ளது என, கூறியிருந்தார். இந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜிவ் சஹாய், ஆஷா மேனன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. அதில் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேதன் சர்மா கூறும்போது , “வாட்ஸ் ஆப், ஸ்கைப், டுவிட்டர், போன்ற செல்போன் செயலிகளுக்கு, தடை விதிக்கவில்லை. இதன் மூலம், ராணுவ வீரர்கள், தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கலாம்,” என்றார். இந்த வழக்கு குறித்து நீதிபதிகள் கூறியதாவது, “இந்த விஷயம், நாட்டின் பாதுகாப்புடன் சம்மந்தப்பட்டது.

நீங்கள் நாட்டின் ஒரு முக்கிய அமைப்பின் அங்கமாக விளங்குகிறீர்கள். ஆகையால், அவர்கள் பிறப்பிக்கும் உத்தரவை ஏற்று கொள்ள வேண்டும். நீங்கள், பேஸ்புக் மீது மிகவும் அக்கறையோடு இருந்தால், ராணுவத்தில் இருந்து விலகிகொள்ளுங்கள். ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்றனுமா, வேண்டாமா என்பதை பற்றி நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். இந்த மனுவை விசாரிக்க, எந்த வலுவான காரணமும் கிடையாது. இந்த கொள்கை முடிவு குறித்தும், இந்த முடிவு எடுத்ததற்கான காரணங்களை, மத்திய அரசிலீட்ட உறையில் வைத்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து, இந்த விசாரணையை, உயர் நீதிமன்றம் ஜூலை 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |