கண்டாச்சிபுரம் அருகே செல்போன் டவரில் ஒயரை திருடிய 3 பேரையும் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது. இந்த செல்போன் டவரில் உள்ள ஒயரை 3 மர்ம நபர்கள் துண்டு துண்டாக வெட்டி திருடிக்கொண்டு இருப்பதை அங்கு பராமரிப்பு பணிக்காக வந்த டெக்னீசியன் பார்த்துவிடடார். அந்த டெக்னீசியன் விழுப்புரத்தை சேர்ந்த சேகர் என்பவர் (வயது 57). இதனை பார்த்த அவர் ஊர் பொதுமக்கள் உதவியுடன் 3 நபர்களை கையும் களவுமாக பிடித்து கண்டாச்சிபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கண்டாச்சிபுரத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் 19 வயது மகன் பரத், 14 மற்றும் 15 வயதுடைய 2 சிறுவர்கள் சேர்ந்து செல்போன் டவரில் ஒயரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 20 துண்டு ஒயா், மொபட் மற்றும் 2 பிளேடுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.