Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

செல்போன் தான் காரணமா…? மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

செல்போன் மீது இருக்கும் மோகத்தால் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த வாலிபரை காவல்துறையினர் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மனநலம் சரி இல்லாதது போல் சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை பாலமுருகன் பார்த்துள்ளார். இதனை அடுத்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் கற்பக ராஜா, செல்வி ஆகியோர் இணைந்து அந்த வாலிபரை பிடித்து வடகரையில் இருக்கும் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்தனர். இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் அந்த வாலிபரின் புகைப்படத்தை பதிவு செய்தனர்.

இந்நிலையில் பாளையங்கோட்டையை சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது மகனின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வந்ததைப் பார்த்து உடனடியாக தென்காசி காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில், சிறுவயதிலிருந்தே செல்போன் மீது இருக்கும் மோகத்தால் அதனை அதிகமாக பயன்படுத்தி வாலிபருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் வாலிபரை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |