செல்போன் தர மறுத்ததால் ஆறாம் வகுப்பு சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மார்த்தாண்டம் பட்டி என்ற கிராமத்தில் சீனிமுருகன் ஜோதி மணி ஆகிய இருவர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரு பிள்ளைகள் இருக்கின்றனர். மூத்த மகன் ஒன்பதாம் வகுப்பும் இளைய மகன் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மூத்தமகன் பள்ளி வேலை நாள் என்பதால் பள்ளிக்கு சென்று விட்டான். இளைய மகன் கொரோனா காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் அவன் வீட்டில் இருந்தான்.
அப்போது சீனிமுருகன் வழக்கம்போல அன்று வேலைக்கு சென்று விட்டார். அதனால் வீட்டில் ஜோதிமணியும் அவருடைய இரண்டாவது பிள்ளையும் இருந்தனர். அப்போது ஜோதிமணி உறவினர் திருமணத்திற்கு செல்ல இளைய மகனை வீட்டில் இருக்கும்படி சொன்னார். அப்போது அச்சிறுவன் தாயிடம் செல்போனை கேட்டு அடம்பிடித்த தாயார் அவனை திட்டி செல்போன் தர மறுத்து அவனை வீட்டில் விட்டுவிட்டு சென்று விட்டார். ஜோதிமணி திருமண விழா முடிந்து வீட்டிற்கு வந்து பார்க்கையில் அவருடைய இளைய மகன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
இதை கண்ட அவர் சத்தம்போட்டு கதறி அழுதுள்ளார் இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை பிரேதபரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரிக்கையில் செல்போன் தர மறுத்ததால் சிறுவன் தற்கொலை செய்துகொண்டு விபரம் தெரியவந்தது.