Categories
தேசிய செய்திகள்

“செல்போன் திருட்டு”…. இளைஞருக்கு கிடைத்த கொடூர தண்டனை…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தின் மார்ஷாகாய் பகுதியில் இளைஞர் கஜேந்திரா ஸ்வைன் வசித்து வருகிறார். பகுதி நேரமாக லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர் மற்ற லாரி ஓட்டுநர்களிடம் வேலை ஏதும் இருக்கிறதா என கேட்டுள்ளார். இந்நிலையில் ஒரு லாரி ஓட்டுநர் தனது அலைபேசி காணவில்லை என கத்தியதால் அங்கிருந்த மற்ற லாரி ஓட்டுநர்கள் கஜேந்திராவை பிடித்துள்ளனர். இதையடுத்து கஜேந்திராவின் இருகைகளையும் இழுத்து லாரியின் முன்பக்கமாகக் கட்டி வைத்து, அவரது கழுத்தில் செருப்புமாலை அணிவித்துள்ளனர். அதன்பின் லாரியை வேகமாக 15-20 நிமிடங்கள் இயக்கி இருக்கின்றனர்.

இதனிடையில் திருடிய இளைஞரை அச்சுறுத்தும் அடிப்படையிலான இக்காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து இளைஞர் புகார் அளிக்கவில்லை என கூறிய ஜகத்சிங்பூர் எஸ்பி அகிலேஷ்வர் சிங் இளைஞர் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தவுடன் லாரி டிரைவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக தானாக முன் வந்து விசாரணைக்கு ஏற்ற ஒடிசா மனித உரிமைகள் ஆணையம், ஜகத்சிங்பூர் எஸ்பிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்து உடனே விசாரணையை தொடங்கி 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |