Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“செல்போன் தொலைந்ததால் கண்டித்த தந்தை”…. டிப்ளமோ மாணவர் எடுத்த விபரீத முடிவு….!!!!!

தந்தை கண்டித்ததால் டிப்ளமோ மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அடுத்திருக்கும் பச்சனம்பட்டி காலனியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் மணிகண்டன். இவர் மேச்சேரியில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இரண்டாம் வருடம் படித்து வந்த நிலையில் சென்ற 27 -ம் தேதி மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய மாணவர் மணிகண்டன் ஆடைகளை துவைப்பதற்காக அம்மாவிடம் கழற்றி கொடுத்துவிட்டு வீட்டுக்குள் சென்று இருக்கின்றார்.

பின்னர் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டதாக சொல்லப்படுகின்றது. நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அவரின் தாயார் கதவை தட்டி இருக்கின்றார். கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மணிகண்டன் மின்விசிறி தொங்கவிடும் இரும்பு கொக்கியில் சேலையால் தூக்கு போட்டு தூங்கியதை பார்த்த அவர்கள் உடனடியாக மீட்டு ஓமலூர் அரச மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். பின் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தற்கொலைக்கான காரணம் தெரிய வந்திருக்கின்றது. அது என்னவென்றால் சென்ற ஐந்து நாட்களுக்கு முன்பாக மணிகண்டன் ஆண்ட்ராய்டு செல்போனை தொலைத்து விட்டார். சென்ற மூன்று நாட்களுக்கு முன்பாக வீட்டில் செல்போன் தொலைந்த தகவலை கூறி புதிய செல்போன் வாங்க பெற்றோரிடம் பணம் கேட்டிருக்கின்றார். இதற்கு அவரின் தந்தை நானே கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றேன். தற்போது செல்போன் வாங்க பணம் எப்படி தர முடியும் எனக் கூறி கண்டித்து இருக்கின்றார். இதில் மனமுடைந்து காணப்பட்ட மணிகண்டன் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

Categories

Tech |