செல்போன் பயன்படுத்தும் நபர்கள் அனைவரும் செல்போனுக்கு பரிசு கிடைத்துள்ளது என்று வரும் தகவலை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். மக்களின் தேவைக்கு ஏற்றவாறு அவ்வப்போது தொழில் நுட்பங்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதில் நல்லது கெட்டது இரண்டுமே உள்ளது. அதனால் சில பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
அதன்படி உங்களது செல்போனுக்கு பரிசு கிடைத்துள்ளது எனவும், அந்தப் பரிசைப் பெற கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும் என வரும் செய்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். நீங்கள் லிங்க்-ஐ கிளிக் செய்தால், உங்களது வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இணையத் திருடர்கள் மூலம் திருடப்படலாம். எனவே பொதுமக்கள் மிக உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.