இன்றைய உலகம் டிஜிட்டல் உலகமாகவே மாறிவிட்டது என்று கூறலாம். முந்தைய காலங்களில் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கும் போது நிலாவை காண்பித்து சாப்பாடு கொடுப்பார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு செல்போனை காட்டி தான் சாப்பாடு கொடுக்கிறார்கள். அந்த அளவுக்கு செல்போன் பயன்பாடு மக்கள் மத்தியில் மிகவும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் செல்போன் பயன்படுத்தாமல் சாப்பிடுபவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஹோட்டலுக்கு குடும்பத்துடன் அதிக அளவில் சாப்பிடுவதற்காக செல்வார்கள். ஏனெனில் அந்த ஹோட்டலில் தான் குழந்தைகள் செல்போன் பயன்படுத்தாமல் பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாக அமர்ந்து சாப்பிடுகிறார்களாம்.