கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற 18 வயது உடைய மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுகந்தி நாள் முழுவதும் செல்போனில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். இதனைப் பார்த்து கோபமடைந்த தாயார் சுமதியை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுமதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சுமதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே சுமதி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்