அமேசான் சிறப்பு சலுகை மூலம் ஐபோன்களுக்கு ரூபாய் 9,000 சலுகை கிடைக்கின்றது. இன்றே கடைசி நாள். விரைவில் முந்துங்கள்.
நாடு முழுவதும் தற்போது கொரோனா காலம் என்பதால் பொருளாதார ரீதியாக மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் ஆடம்பர பொருட்களை வாங்குவது என்பது சிரமமாக உள்ளது. இது போன்ற சமயத்தில் தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, சிறப்பு சலுகைகளையும் தள்ளுபடி விற்பனையையும் அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகை ஜூலை 8-ஆம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்திருந்தது.
அதன்படி இந்த சலுகையை பெற இன்றே கடைசி நாள் என்பதால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான மொபைல் போன்களை குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம். ஒன் பிளஸ், க்ஷியோமி, சாம்சங், ஆப்பிள், விவோ, ஒப்போ குறைந்த விலையில் கிடைக்கின்றது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளும் இந்த திட்டத்தில் சலுகையை வழங்குகின்றது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிரெடிட் கார்டை பயன்படுத்தி நாம் இதில் ஷாப்பிங் செய்தால் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.
அதன்படி ஐபோன் விரும்பிகளுக்கு ‘ஐபோன் 12’ போனுக்கு 9000 தள்ளுபடி வழங்குகிறது. இந்த போனை 70 ஆயிரம் கொடுத்து நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். ஒன் பிளஸ் 9 சீரீஸ் போன் ரூ.4,000 தள்ளுபடியில் கிடைக்கின்றது. அதுமட்டுமில்லாமல் 9 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ வசதியும் இதில் உள்ளது. இதைப் பயன்படுத்தி செல்போன் பிரியர்கள் தள்ளுபடியில் செல்போன்கள் வாங்கிக் கொள்ளலாம்.